இந்திய தலைநகர் புதுடில்லியில் மீண்டும் அமைதியும் ஐக்கியமும் நிலவவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ்சிங்கும் விரேந்திரசெவாக்கும்  வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டுவிட்டரில் இது குறித்த தனது கருத்தை பதிவு செய்துள்ள யுவராஜ்சிங் புதுடில்லியில் இடம்பெறும் விடயங்கள் மனதிற்கு கடும் மனவேதனையை ஏற்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

அமைதியையும் ஐக்கியத்தையும் பேணுவதற்காக அனைத்தையும் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் நிலைமையை சரிசெய்வதற்காக அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாங்கள் அனைவரும் மனித பிறவிகள் பரஸ்பரம் அன்பையும் மதிப்பையும் வெளிப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை புதுடில்லியில் இடம்பெறுவது துரதிஸ்டமானது என குறிப்பிட்டுள்ள விரேந்திர செவாக் எவருக்கும் காயமோ பாதிப்பு ஏற்பட்டாலும் அது இந்த நாட்டின் தலைநகரிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

ஹர்பஜன் சிங்கும் இவ்வாறாதொரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.