பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நுகேகொட நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையும் வெளிநாட்டு பயணங்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் தமது கடமைகளை முன்னெடுக்கும் போது சட்ட ரீதியாக எந்த அதிகாரமும் இன்றி அவர்களுக்கு அழுத்தம் கொடுத்தமை அல்லது அழுத்தம் கொடுக்க முயற்சித்தமை  தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கடந்த ஜனவரி 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.