ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பு திட்டம் ; நேர்முக தேர்வில் இராணுவம்

Published By: Digital Desk 4

26 Feb, 2020 | 03:35 PM
image

குறைந்த வருமானம் பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டத்திற்கான நேர்முக தேர்வுகள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

குறித்த நேர்முக தேர்வானது இன்றைய  தினத்திலிருந்து எதிர்வரும் நான்கு நாட்களுக்கு பிரதேச செயலகங்களில் நடைபெறவுள்ளது. 

யாழ் மாவட்டத்தில் 26 066 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முக தேர்வுகள் பிரதேச ரீதியில் அவர்களுக்கான பிரதேச செயலங்களில் நடைபெறுகின்றன. 

குறித்த நேர்முக தேர்வில் நேர்முக அதிகாரிகளாக இரண்டு அரச அதிகாரிகளும் , இரண்டு இராணுவத்தினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த இராணுவ அதிகாரிகள் வேலை வாய்ப்பில் தெரிவானோர்களின் விபரங்களை திரட்டி அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களின் உண்மை தன்மையை அறியும் செயற்பாட்டிலும் , பின்னர் அவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் வீட்டு நிலைமைகளை நேரில் ஆராய்ந்து அவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதனை இராணுவத்தினர் உறுதிப்படுத்திய பின்னரே அவர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கபடுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழைய வீடியோக்களையும் உயர் HD தரத்தில்...

2025-11-07 18:21:04
news-image

நான்கரை மணிநேரம் வரவு - செலவுத்...

2025-11-07 18:05:55
news-image

விபத்தில் சிக்கி இஸ்ரேலிய பிரஜை படுகாயம்!

2025-11-07 18:07:23
news-image

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி...

2025-11-07 17:44:54
news-image

2026 ஆம் ஆண்டுக்கான வரவு -...

2025-11-07 17:41:55
news-image

வரவு - செலவுத்திட்டம் - 2026...

2025-11-07 17:30:55
news-image

உள்ளூராட்சி மன்ற சேவைகளை வினைத்திறனாக்க நிதி...

2025-11-07 17:30:43
news-image

ஆசிரிய கலாசாலை மாணவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு...

2025-11-07 17:31:28
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளை நிர்மாணித்துக் கொள்ள...

2025-11-07 17:27:18
news-image

பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹபொல கொடுப்பனவு அதிகரிக்கப்படும்...

2025-11-07 17:25:35
news-image

இயற்கை அனத்தங்களால் பாதிக்கப்பட்ட 1200 குடும்பங்களுக்காக...

2025-11-07 17:22:24
news-image

2026 மூன்றாம் காலாண்டில் டிஜிட்டல் அடையாள...

2025-11-07 17:21:43