இந்தியாவின் புதுடில்லியில் வன்முறைகளால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஜப்ரபாத் பகுதியில் கால்வாயொன்றிலிருந்து புலனாய் பிரிவு அதிகாரியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் புலனாய்வு பணியகத்தில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றிவரும் அன்கிட் சர்மா என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

காடையர் கும்பலொன்று இவரை தாக்கி கொலை செய்த பின்னர் கால்வாயில் இவரது உடலை வீசியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்கிழமை காணாமல்போன இவரை தேடி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்திய புலனாய்வு பணியகத்தில் பணிபுரியும் அன்கிட்டின் தந்தை புதுடில்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவர்களே தனது மகனை கொலை செய்தனர் என தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தாசப்த காலத்தில் புதுடில்லியில் இடம்பெற்ற மிகமோசமான வன்முறைகள் காரணமாக 20  அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 250ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

புதுடில்லியின் வடக்குகிழக்கில் இந்து முஸ்லீம் குழுக்களிற்கு இடையில் இடம்பெற்ற மோதல்கள் காரணமாக இந்த உயிரிழப்புகள்  ஏற்பட்டுள்ளன.

இந்தியாவின் திருத்தப்பட்ட குடியுரிமை சட்;டத்திற்கு ஆதரவானவர்களிற்கும் அதனை எதிர்ப்பவர்களிற்கும் இடையிலான மோதல்கள் இந்து முஸ்லீம் குழுக்கள் மத்தியிலான மோதலாக மாற்றமடைந்தது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் துப்பாக்கி, கத்திகள் வாள்களுடன் புதுடில்லி வீதிகளில் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர்.