ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வேன் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு முன்பாக வேன் ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்த மூவர் கடும்காயங்களுக்குள்ளாகி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இந்நிலையில், ஹட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி ஐஸ் கிரீம் வகைகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த மூவரில் சிறு குழந்தை ஒன்றும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.