மலேசியாவில் வீடொன்றில்  இடம்பெற்ற தீ விபத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் இருவர் காயடைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் மலேசியாவின் மெம்பாகுட்  பகுதியிலுள்ள பண்டவு கிராமத்தில் அமைந்துள்ள வீட்டிலேயே இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தீயில் கருகி தாய், மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கணவரும்  மகன் ஒருவரும் தீக்காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார்கள்.

தீயணைப்பு குழு தகவலை அறிந்து சுமார் 17 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சம்பவ இடத்திற்கு சென்றபோது, குறித்த மர வீடு முற்றிலும் தீக்கிரையாகியுள்ளது.

காயமடைந்த கணவனும் மகனும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.