மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலி்ல் மோதுண்டு நபரொருவர் பலியான சம்பவமொன்று நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் சென்ற இரவு நேர ரயில் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி மஜ்மா நகர் பகுதியில் பயணிக்கும் போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் பொலண்நறுவையை பிறப்பிடமாகவும் நாவலடியில் வசிப்பிடமாகவும் கொண்ட நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.அனீஸ் (வயது 25) என தெரியவந்துள்ளது.

இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன்போது உயிரிழந்தவரின்  உடல் பிரேதப் பரிசோதனைக்காக தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.