நாட்டில் எதிர்வரும் தினங்களில், இரண்டு மாகாணங்களிலும், மூன்று மாவட்டங்களிலும் கடுமையான வெப்பத்துடன் கூடிய காலநிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேல், வடமேல் மாகாணங்களிலும், காலி,மாத்தறை, மன்னார் மாவட்டங்களிலும் எதிர்பார்க்கப்பட்டதை விட வெப்பத்துடன் கூடிய காலநிலை காணப்படுகிறது.

எனவே,  பிரதேசங்களில் வசிப்போர் கூடுதலாக நீரை அருந்துவது அவசியமாகும். நிழல் தரும் இடங்களை பயன்படுத்துவது அவசியம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.