ஹல்துமுள்ளையில் வேனொன்று மின் கம்பத்தில் மோதி முன்னூறு அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்ததுடன்  மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமுற்ற மூவரும் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையின் விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த விபத்தில் மடூல்சீமையைச் சேர்ந்த எம். நாகநாதன் என்ற 47 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

கொழும்பிலிருந்து, மடுல்சீமைக்கு நோயாளியொருவரை வேனொன்றில் கூட்டி செல்லும் போதே குறித்த வேன் மின்கம்பமொன்றில் மோதி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதையடுத்து ஹல்துமுள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மேற்படி விபத்து குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.