மீகொட - வடரெக  பகுதியில் திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போது துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

குறித்த பகுதியில் சென்ற சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வடரெக - மீகொட பகுதியைச் சேரந்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை  திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.