ஒரு தொகை மதுபான போத்தல்களுடன் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரொருவரை மதுவரி திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். 

நேற்று இரவு 11 மணியளவில் மதுவரி திணைக்களத்தினர் கொழும்பில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது முச்சக்கரவண்டியில் மறைத்துக்கொண்டு சென்ற  ஒரு தொகை மதுபானத்தை  கைப்பற்றியதோடு, சந்தேகநபரையும் கைதுசெய்துள்ளனர். 

ரணால பகுதியைச் சேர்ந்த 43 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறுந்துவத்தை பகுதியில் வைத்து குறித்த மதுபான போத்தல்களை ஏற்றியதாக கைதுசெய்யப்பட்ட நபர் மதுவரி திணைக்கள அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். 

முச்சக்கரவண்டியில் பொலித்தீன் பைகளால் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 300 போத்தல்களை கைப்பற்றியுள்ளனர். இதன் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.