பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்து சிறுமி தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை முயற்சி

By R. Kalaichelvan

26 Feb, 2020 | 03:21 PM
image

இந்தியாவின் மத்திய பிரதேத்தில் மூன்று ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தாக தெரிவித்து 14 வயதுடைய சிறுமி ஒருவர் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுமி தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ள நிலையில் அவர் தீக் காயங்களுக்குள்ளான நிலையில் நாக்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது உடலில் 95 வீதமான பகுதி தீயில் எரிந்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள சிறுமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் குறித்த வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் சிறுமி குறித்து தெரிவிக்கையில்,

இவ்வாறு பாதிக்கப்பட்ட சிறுமியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன் மீது சிலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். எமது குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விபரங்கள் வெளிவராத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  டெல்லியில்  கடந்த 2012 ஆண்டு 23 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட பின்பு கொல்லப்பட்டார்.

இதனை தொடர்ந்து கடந்த 2017 ஆண்டு இந்தியாவில் பாலியல் தொடர்பாக  தினமும் 90 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் மத்திய தேசிய குற்றப்பதிவு பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக இந்தியா மிகவும் கடுமையான சட்டத்தை இயற்றியது.

அத்தோடு கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்ட பின்பு தீயிட்டு எரித்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதனை அடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 4 நபர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

பின்பு பெண் வைத்தியர் கொல்லப்பட்ட இடத்திற்கு சந்தேக நபர்களை அழைத்துச் சென்று சம்பவம் தொடர்பில் நடித்துக் காட்டுமாறு தெரிவித்ததை அடுத்து , அவர்கள் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்தபோது ஹைதராபாத் பொலிஸார் சந்தேக நபர்கள்  மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் நால்வரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right