கிரேட்டா துன்பெர்க் பிரிட்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றபோது மலாலா யூசுப் சாயை சந்தித்துள்ளார்.

பிரிட்டனிலுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மலாலா க்ல்வி கற்று வருகிறார். 22 வயதான மலாலா படித்துக் கொண்டே தொடர்ந்து பெண் கல்விக்காகப் பல பணிகளைச் செய்து வருகிறார். சுவீடன் நாட்டு கால­நிலை மாற்­றத்­துக்கு எதி­ரான இயக்­கத்தைச் சேர்ந்த 17 வயது கிரேட்டா துன்பெர்க் கால­நிலை மாற்றம், சுற்­றாடல் பாதிப்பு தொடர்­பாக ஐ.நா.வில் உலகத் தலை­வர்கள் முன்­னி­லையில் விமர்­சித்துப் பேசி புகழ்­பெற்றுள்ளார்.

கிரேட்டா துன்பெர்க் பிரிஸ்டலில் இடம்பெறவுள்ள பாடசாலை புறக்­க­ணிப்பு போராட்டத்தில் இணையவுள்ளார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் அரசியல், தத்துவம் மற்றும் பொருளாதாரம் படித்து வரும் மலாலாவை சந்தித்துள்ளார்.

இந்நிலையில், இருவரும்  சந்தித்து பேசி  எடுத்த புகைப்படங்களை மலாலா தனது டுவிட்டரில் பதிவிட்டு "நான்  பாடசாலையை  தவிர்ப்பதற்கு ஒரே நண்பி இவள் தான் " என்று   கூறியுள்ளார்.

கிரேட்டா துன்பெர்க் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை பதிவிட்டு "எனவே ... இன்று நான் எனது முன்மாதிரியை சந்தித்தேன், வேறு என்ன சொல்ல முடியும்?" என கூறியுள்ளார்.

இவர்கள் இருவரின்  புகைப்படங்களை ஆயிரக்கணக்கானோர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தங்களின் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்கள்.