சிரியாவின் இட்லிப் நகரில் இடம்பெற்ற வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல் சம்பவம் ஒன்றில் 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் உள்ள வைத்தியசாலை மற்றும் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 9 குழந்தைகள் , 3 ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவ பராமரிப்பு மற்றும் நிவாரண அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சம்பவத்தில் காயமடைந்து 80 க்கும் மேற்பட்டவர்களில் குழந்தைகள் மற்றும் பெண்களும் உள்ளடங்குவதாக அந்நாட்டு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிரிய படையினர் மற்றும் ரஷ்யப் படையினர் இணைந்து பயங்ரவாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் தெற்கு கிராமப்புறங்களில் உள்ள பல நகரங்களை கிளரச்சியாளர்களின் பிடியில் இருந்து கைப்பற்றியதாக அறிவித்திருந்த அந்நாட்டு இராணுவத்தினர் , ரஷ்ய இராணுவத்தினருடன் இணைந்து பல்வேறு தாக்குதல்களை குறித்த பகுதியில் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Image Help : CNN