இலங்கை மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

அதன்படி குறித்த போட்டியானது இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள கிரான் பொல்லார்ட் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் அணியானது இலங்கை அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 2 இருபதுக்கு : 20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த சனிக்கிழமை கொழும்பு. எஸ்.எஸ்.சி. மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியானது ஒரு விக்கெட்டுக்களினால் சாதூர்யமாக வெற்றி பெற்றது.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் அணியானது 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 289 ஓட்டங்களை குவித்தது.

290 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்காளன அவிஷ்க பெர்னாண்டோ (50), திமுத் கருணாரத்ன (52) குசல் பெரேரா (42) திசர பெரேரா (32) மற்றும் வர்னிந்து ஹசரங்க (42) போன்றவர்களின் நேரத்தியான துடுப்பாட்டம் காரணமாக இலங்கை அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சிவிப்பாளர் மிக்கி ஆர்தர், 

மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அணிக்காக விளையாடிய பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் இலங்கை அணிக்கான நல்ல அறிகுறி.

அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, அவிஷ்கா பெர்னாண்டோ ஆகியோர் அரைசதம் அடித்தனர், வனிந்து ஹசரங்கா ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்களை எடுத்தார்.

எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் முறையே 52, 50, 47, 20, 5 மற்றும் 18 ஓட்டங்களை எடுத்தனர். மேலும் இது விக்கெட்டுகளுக்கு இடையில் சில நல்ல தொடர்புகளை உருவாக்க எங்களுக்கு உதவியது. எனினும் இன்னுமோர் சிறந்த துடுப்பாட்ட வீரர் எங்களுக்கு தேவை என்றார்.

அத்துடன் முதல் வெற்றியின் மூலம் இலங்கை அணி வீரர்கள் மத்தியில் வெற்றிக்கான அவ அதிகமாக உள்ளதாகவும், வீரர்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளதாகவும மிக்கி ஆர்தர் மேலும் கூறினார்.