சர்வதேச விசாரணை இடம்பெற்றதாக சுமந்திரன் பொய் கூறுகிறார் ; கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 

Published By: Digital Desk 4

26 Feb, 2020 | 11:04 AM
image

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக இதுவரை நடக்காத சர்வதேச விசாரணை நடந்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் .எம்.ஏ.சுமந்திரன் பொய் சொல்லி வருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Image result for கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

த.தே.ம முன்னணியின் ஊரோடு உறவாடுவோம் கலைப் பிரிவினரின் விளையாட்டு நிகழ்வில் பங்கெடுத்த  வீரங்கனைகள் கௌரவிப்பு நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மகளிர் அணித் தலைவி வாசுகி தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கி கௌரவித்தனர்.

இந் நிகழ்வின் பின் ஐ.நா தீர்மானத்தில் இணை அனுசரணையில் இருந்து இலங்கை விலகிக் கொள்வது தொடர்பில் ஊடகங்களுக்கு கஜேந்திரகுமார் கருத்துத் தெரிவித்தார்,

இதில் சவேந்திர சில்வா மீதான அமெரிக்காவுக்கான பயணத் தடையை ஐ.நா வின் விசாணைகளுக்கு அமைய எடுக்கப்படுள்ளதாக ஒரு தரப்பு கூறி வருகிறது. ஆனால் அதுவல்ல உண்மை.சீனா சார்பில் இருந்து விலகாமல் ஐரோப்பிய நாடுகளின் வட்டத்துக்குள் வராது விட்டால், சவேந்திர சில்வாவுக்கு மட்டுமல் ராஜபக்சவுக்கும் இது தான் நிலை என்பதை இந்தத் தடையினூடாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சர்வதேச விசாரணை முடிவடைந்துவிட்டதாக கூறுவது அப்பட்டமான பொய். இலங்கையில் இடம்பெற்றது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற வேண்டியது தொடர்பான அறிக்கை ஒன்றை மாத்திரம் ஐ.நா வெளியிட்டது அதனை சர்வதேச விசாரணை இடம்பெற்றுவிட்டதாக ஒரு தரப்பு பொய்களை கூறிவருகிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06