(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

சர்வதேச மன்னிப்புச் சபையும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை  இலங்கை தொடர்பாக ஓர் உப குழுக் கூட்டத்தை ஜெனிவா வளாகத்தில் நடத்துவதற்கு  ஏற்பாடு செய்துள்ளன.  

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படவேண்டும், பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக் கப்படவேண்டும்.  என்ற விடயங்களை வலியுறுத்தியே இந்த  உபகுழுக்கூட்டத்தை   இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இணைந்து நடத்துகின்றன.

இதில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மனித உரிமை பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பாதிக்கப்பட்ட மக்கள் மனித உரிமை அமைப்புக்களின் தலைவர்கள், சிவில் சமூக  உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து  கொண்டு உரையாற்றவுள்ளனர்.

ஜெனிவாவில்  இலங்கை தொடர்பான  விவாதம் வியாழக்கிழமை பிற்பகல் வேளையில் நடைபெறவுள்ள நிலையிலேயே  மறுதினம் வெள்ளிக்கிழமை சர்வதேச மனித உரிமை  கண்காணிப்பகமும்  சர்வதேச மன்னிப்புசபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள   உபகுழுகூட்டம்   நடைபெறவுள்ளது.