மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்ற 4 பேருக்கு 1 இலட்சத்து 95 ஆயிரம் ரூபாவை தண்டப் பணமாக செலுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. றிஸ்வான் உத்தரவிட்டார்.

களியாட்டத்திற்கு தனியார் வங்கி முகாமையாளர்கள் வாகனம் ஒன்றில் சென்று நள்ளிரவு 1 மணியளவில் மட்டக்களப்பை சென்று தமது வங்கியில் நிறுத்தி வைத்துவிட்டு சென்ற மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீடுகளுக்கு வேவ்வேறு பாதையில் திரும்பும் போது போக்குவரத்து பொலிசாரின் வீதி சோதனையின் போது மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தி சென்றுள்ளதை கண்டுபிடித்தனர்
அவ்வாறு இரு வங்கி முகாமையாளர்கள் உட்பட 4 பேரை அன்றைய தினம் பொலிசார் மட்டக்களப்பு நகர் பகுதியில் கைது செய்தனர். இவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.சி. றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது வங்கி முகாமையாளர் ஒருவருக்கு 30 ஆயிரம் ரூபாவும் மற்றவருக்கு 55 ஆயிரம் ரூபாவும் சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் மதுபோதையில் மோட்டர் சைக்கிள் செலுத்திய ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவும், வேறு ஒருவருக்கு 55 ஆயிரம் ரூபாவை செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM