கொவிட் -19 குறித்து அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொவிட் -19 வைரஸ் ஏற்கனவே பல நாடுகளுக்கு பரவியுள்ளது. இது உலக சுகாதார மற்றும் பொருளாதார துறைகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் இலங்கை பாராட்டுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில், வைரஸ் கட்டுப்பாட்டை மீறி பரவுவதால் மேலும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நமல் தெரிவித்துள்ளார்.

"சீனாவிலிருந்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இலங்கையில் சீன சுற்றுலா பயணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்ப்பட்டுள்ள நிலையில், நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இலங்கை ஐரோப்பிய சந்தைகளை சார்ந்துள்ளது, இப்போது அதுவும் குறிப்பிட்ட அளவிற்கு வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது, "என்றார்.

உலகளவில் வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்காக தடுப்பு நடவடிக்கைகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வலுப்படுத்த நாடுகள் ஒன்றிணைந்து மேற்கொள்ள வேண்டும். உலகப் பொருளாதாரத்தை  எவ்வாறு நன்கு பாதுகாக்க முடியும் என்ற வழி முறைகளை கையாள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நன்கு குணப்படுத்தப்பட்டு கடந்த வாரம் லைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நோயாளியே கொரோனா வைரஸின் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட முதல் சம்பவமாக இலங்கை இதுவரை தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான மூன்று பேர் வைரஸ் தொற்றுக்கள் இதுவரை ஐ.டி.எச் மற்றும் உள்ளூர் வைத்தியசாலையில் பதிவாகியிருநு்த நிலையில் குறித்த மூவரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.