(ஆர்.விதுஷா)

சம்­பள  முரண்­பாட்­டுப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வி­னைப்­பெற்­றுத்­த­ரு­மாறு  கோரி இன்று நாட­ளா­விய ரீதி­யி­லுள்ள ஆசி­ரி­யர்கள் சுக­வீன விடு­முறைப் போராட்­டத்தில்  ஈடு­ப­ட­வுள்­ளனர். இந்த போராட்­டத்தின் ஒரு அங்­க­மாக  30 கல்வித் துறைசார்   தொழிற்­சங்­கங்கள்  ஒன்­றி­ணைந்து இன்று  காலை  9 மணிக்கு   பத்­த­ர­ முல்லை புத்­த­தாச விளை­யாட்டு  மைதா­னத்­தி­லி­ருந்து   கல்வி  அமைச்­சுக்கு  ஊர்­வ­ல­மாக சென்று  தமது  ஆறு அம்ச  கோரிக்கை அடங்­கிய மக­ஜ­ரொன்றை கைய­ளிக்­க­வுள்­ளன.

இது தொடர்பில்  இலங்கை  ஆசி­ரியர்  சங்­கத்தின்  பொதுச் செய­லாளர்  ஜோசப் ஸ்ரா லினை  தொடர்புகொண்டு கேட்­ட­போது அவர்  கூறி­ய­தா­வது, 1994 ஆம் ஆண்டில்  ஆசி­ரியர் சேவை  உரு­வாக்­கப்­பட்­டதை  தொடர்ந்து   ஆசி­ரி­யர்­க­ளு­டைய  சம்­ப­ளத்தை  அதி­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.  ஆயினும்  1997ஆம் ஆண்டில் நிறு­வப்­பட்ட  பீ.சி.பெரேரா ஆணைக்­கு­ழுவின்  ஊடாக  வெளி­யி­டப்­பட்ட   2/97 இலக்க   சுற்­ற­றிக்­கையின்  பிர­காரம்  ஆசி­ரி­யர்­களின்  சம்­பளம்  குறைக்­கப்­பட்­டது.

அத­னைத்­தொ­டர்ந்து  சம்­பள  முரண்­பாட்­டுக்­கான  தீர்வை  பெற்­றுத்­த­ரு­மாறு  கோரி கடந்த 23  வரு­டங்­க­ளாக  போராட்­டங்­களை  முன்­னெ­டுத்­தி­ருந்தோம்.  இருப்­பினும் எமது சம்­பள முரண்­பாட்­டுக்­கான  தீர்வு இன்­னமும்கூட கிடைக்­கப்­பெ­ற­வில்லை.  

கடந்த அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்­திலும்  எதிர்ப்பு  ஆர்ப்­பாட்­டத்­தினை  மேற்­கொண்­டி­ருந்தோம். அதனை  அடுத்து  முன்னாள் ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால  சிறி­சேன  தலை­மையில்   10பேர் கொண்ட அமைச்­ச­ரவை  உப­குழு அமைக்­கப்­பட்டு எமது சம்­பள முரண்­பாடு தொடர்பில்  ஆரா­யப்­பட்­டது.

அதனையடுத்து ஆசி­ரியர்  அதிபர்  சேவையை  வரை­ய­றுக்­கப்­பட்ட சேவை­யாக  அறி­வித்து கடந்த வருடம்  ஒக்­டோபர்  மாதம் முதலாம் திகதி  அமைச்­ச­ர­வைப்­பத்­திரம்  வெளி­யி­டப்­பட்­டது. இந்­நி­லையில்  அந்த நட­வ­டிக்­கைகளை  முன்­னெ­டுக்கும் வரை­யி­லான  இடைக்­கால  கொடுப்­ப­னவை  வழங்­கு­மாறு  மீண்டும் கோரிக்­கை­யொன்­றினை  அர­சாங்­கத்­திடம் முன்­வைத்­தி­ருந்தோம். அதனை  வழங்­கு­வ­தாக  கூறி  கடந்த  அர­சாங்கம்  ஒக்­டோபர்  மாதம் 15  ஆம்  திகதி  மீண்­டு­மொரு  அமைச்­ச­ரவை  தீர்­மா­னத்தை வெளி­யிட்­டி­ருந்­தது.

இருப்­பினும் புதிய  அர­சாங்கம்  ஆட்­சிக்கு  வந்­ததை அடுத்து  கடந்த  அர­சாங்­கத்தின்   அமைச்­ச­ரவை தீர்­மா­னத்தை  நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான எந்த நட­வ­டிக்­கை­க­ளையும்  முன்­னெ­டுக்­க­வில்லை.  ஆகவே,  கடந்த 14ஆம் திகதி  ஆர்ப்­பாட்­ட­மொன்­றினை  முன்­னெ­டுத்­தி­ருந்தோம். அதனை  தொடர்ந்து  20ஆம்  திகதி  அதற்­கான  முடிவை  பெற்­றுத்­த­ரு­வ­தாக  அர­சாங்கம்  கூறி­யி­ருந்­தது. இருப்­பினும்  எந்த தீர்வும் இது­வ­ரையில்  கிடைக்­கப்­பெ­ற­வில்லை.  ஆகவே  இன்று   சுகவீன விடு­மு­றைப்­போ­ராட்­டத்தை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

இந்த விவ­காரம்  தொடர்பில்  எதிர்க்­கட்­சி­யி­னரும்  தமது  கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்­தனர்.  ஆசிரி­யர்­களின்  சம்­ப­ள­மு­ரண்­பாட்டு பிரச்­சி­னை­க­ளுக்கு     தீர்­வு­காண்­ப­தற்­கான  வழி­வ­கை­களை  ஆராய்ந்த  பீ.சி. பெரேரா  ஆணைக்­கு­ழுவின்    சிபா­ரி­சு­களை   அர­சாங்கம்  உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என ஐக்­கிய  தேசிய  கட்­சியின்  களுத்­துறை  மாவட்ட பாரா­ளு­மன்ற  உறுப்­பினர்  அஜித் பீ. பெரேரா கோரிக்கை விடுத்தார்.

தான்  அங்கம் வகிக்கும் கல்வி  துறைசார்  சங்­கத்­தி­னரும்  இந்த எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில்  கலந்துகொள்­ள­வுள்­ள­தா­கவும் அவர்  மேலும் குறிப்­பிட்­டி­ருந்தார்.  

அதே­வேளை  இந்த  சம்­பள  முரண்­பாடு  தொடர்பில்  ஆளும்  தரப்­பி­ன­ரு­டைய கருத்து  மாறுபட்ட விதத்தில் காணப்­பட்­டது.  இவ்­வா­றாக  ஆசி­ரி­யர்கள்  எதிர்ப்பு போராட்­டத்தை முன்­னெ­டுப்­பது  பய­னற்ற விட­ய­மாகும். ஏனெ­னில்­ இ­டைக்­கால நிதியைக்கொண்டே அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன.  இந்­நி­லையில்   அரச  ஊழி­யர்­க­ளுக்­கான  சம்­பள  உயர்­வையோ  ஓய்­வூ­திய  கொடுப்­ப­ன­வி­னையோ பெற்­றுக்­கொ­டுக்க  முடி­யாது.   

பொதுத்­தேர்­த­லின்­ பின்­ன­ராக  புதிய  அமைச்சரவை நியமிக்கப்பட்டதன் பின்னராகவே, சம்பள  ஆணைக்குழுவின்  ஊடாக   சம்பள  முரண்பாட்டுக்கான  தீர்வினைப்பெற்றுக்கொடுக்க  முடியும் என்று  தகவல்  மற்றும் தொடர்பாடல்  தொழில்நுட்ப  இராஜாங்க  அமைச்சர்  லக்ஷ்மன் யாப்பா  அபேவர்தன நேற்று  செவ்வாய்க்கிழமை ஊடக அமைச்சில்  இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்  போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில்   இந்த கருத்தினை  தெரிவித்திருந்தார்.