இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனம் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்கியதை நிறுத்தியதன் விளைவாகவே பெப்ரவரி 03 ஆம் திகதி திட்டமிடப்படாத மின்சார வெட்டு ஏற்பட்டது என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

3 ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளில் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் தன்னிச்சையாக மின்சாரத்தை துண்டித்தமை தொடர்பில் இலங்கை மின்சார சபையிடம் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவு அதற்கான காரணம் குறித்து அறிக்கை கோரியிருந்தது.

இந் நிலையில் இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளது.