காலி-கரன்தெனிய-தெமடகஸ் ஓகந்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 68 வயதுடையவர் எனவும் பல காலமாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சகோதரியின் மகளான 27 வயதுடைய பெண்ணே இக்கொலையை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு எவ்வித சிகிச்சைகளையும் வழங்கப்பட முடியாத நிலையில் இக்கொலையை அப்பெண் புரிந்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.