
இலங்கை தமிழ் மக்களின் அரசியல் சரித்திரத்தில் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு அதி முக்கியமான வருடமாக இருக்குமென நான் நம்புகின்றேன் என்று எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அகில இலங்கை இந்து மாமன்றத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டி மட்டக்களப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிவதொண்டர் மாநாட்டின் ஆறுமுக நாவலரின் எழுச்சிக் கருத்தரங்கின் இறுதி வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மட்டக்களப்பு இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கிழக்கு பல்கலைக்கழக இந்து மாணவர் மன்றத்தின் ஆதரவுடன் கிழக்கு பல்கலைக்கழகத் தின் மட்டக்களப்பு நாவற்குடா சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; அடுத்த வருடத்திற்குள் இந்த நாட்டில் நீண்டகாலமாக தமிழ் மக்களுக்கு நடைபெறாத பல விடயங்கள் நடைபெற வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது. நடைபெற வேண்டிய நிலைமை தற்போது உருவாகியிருக்கின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினை தற்போது இந்த நாட்டில் மட்டும் ஏற்றுக் கொண்ட பிரச்சினையல்ல. எமது பிரச்சினை முன்னெப்போதுமில்லாதளவுக்கு சர்வதேசமயமாக்கப்பட்ட ஒரு பிரச்சினையாகும்.
இன்று சர்வதேச சமூகம் பல சர்வதேச நாடுகள் ஐக்கிய நாடுகள் சபை விசேடமாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவை இலங்கை விடயத்தில் உன்னிப்பாக இருக்கின்றன. குறிப்பாக நிரந்தரமான சமாதானம் நிரந்தரமான புரிந்துனர்வு நிரந்தரமான நல்லிணக்கம் உண்மை கண்டறியப்பட்டு தீர்வு வழங்கப்படுதல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்படுதல் என்பன தொடர்பில் இந்த தரப்புக்கள் அவதானமாக இருக்கின்றன.
மேலும் ஒரு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டுமென்பதில் சர்வெதேச சமூகம் உறுதியாக இருக்கின்றது.
ஆகவே இந்த நேரத்தில் நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக ஒருமித்து எங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளை நாங்களே பேசி தீர்த்துக் கொண்டு கருமத்தை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமாகும். இந்த உதவியை அனைவரும் வழங்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன்.
1915ஆம் ஆண்டு பெரும்பான்மை இனத்தை சேர்ந்த சிங்கள தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது அவர்களின் விடுதலைக்காக தமிழ் தலைவர் சேர்பொன்னம்பலம் இராமநாதன் ஆற்றிய பணிகள் மிகவும் மதிக்கத்தக்கனவாகும்.
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தில் நல்லூரில் பிறந்தவர். மிகவும் வசதியான ஒரு குடும்பத்தில் பிறந்தவர். சமூகத்தில் மிகவும் மதிப்பை பெற்ற குடும்பத்தில் பிறந்தவர். அவர் கல்வியில் உயர் கல்வியில் தேர்ச்சியடைந்தார்.
சைவமும் பாதுகாக்கப்படல் வேண்டும் என்ற பணியில் மிகவும் தீவிரமாக இவர் செயல் பட்டார்.
சைவ சமயத்தை பின்பற்றுகின்றவர்கள் வேறு மதங்களுக்கு மாறிச் செல்வதை தடுக்க வேண்டுமென்பதில் அக்கறையோடு இருந்தார்.
தெரியாமை காரணமாக அல்லது அறியாமையின் காரணமாக மக்கள் மதமாற்றத்தில் ஈடுபடக் கூடாது. மத மாற்றத்திற்கு பலியாக கூடாது. மக்கள் மத்தியில் சென்று சைவத்தின் தகமைகளை பெருமைகளை விளக்க வேண்டியது அத்திவசியமானது என்ற கடமையை மக்களிடம் செய்தால்தான் மதமாற்றத்தை தடுக்கலாம் என்பதை ஆறுமுக நாவலர் உணர்ந்தார். அதன்படி நடந்தார்.
தமிழ் மொழியை வளர்ப்பதிம் முன்னேற்றுவதிலும் அவர் பெரும் பங்காற்றினார். யாழ்ப்பாணத்தின் கல்வி வளர்ச்சிக்காக அவர் பாரிய பங்களிப்பை செய்தார். அவர் தனக்காக வாழ வில்லை. அவர் மக்களுக்கு வாழ்ந்தவர். மக்கள் மத்தியில் சைவத்தை வளர்ப்பதற்காகவும் தமிழ் மொழி எழுச்சி பெறுவதற்காகவும் செயற்பட்டார்.
அவை இரண்டையும் மக்கள் பின் பற்ற வேண்டும் என நீண்டகாலமாக பாரிய பணியாற்றினார்.
அவருக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக நாம் இருக்க வேண்டும். அதனை நாங்கள் பின் பற்ற வேண்டும்.
சுவாமி விபுலானந்தர் கல்வியில் தேர்ச்சியடைந்தார்.தமிழ் மொழியின் பேராசிரியராக அன்னாமலை பல்கலைக்கழகத்தில் கடமை புரிந்தார். மட்டக்களப்பில் பல பாடசாலைகளை வளர்ப்பதில் கடும் முயற்சி எடுத்தார்.சிவானந்தா வித்தியாயலயம் அவரால் உருவாக்கப்பட்ட ஒரு பாடசாலையாகும்.
திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்துக் கல்லூரிக்கும் சுவாமி விபுலானந்தர் ஒரு காரணகர்த்தாவாக இருந்தார்.
ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்தவர். சுவாமி விபுலானந்தர் மட்டக்களப்பைச் சோ்ந்தவர். இவர்களின் படிப்பினைகளை பின் பற்ற வேண்டியது எமது கடமையாகும். அத்தியாவசியமாகும். விசேடமாக இளைஞர்கள் இவர்களை பின் பற்ற வேண்டும்.
மட்டக்கப்பு மாவட்டம் மிகவும் ஒரு முக்கியமான மாவட்டம். தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்கின்ற இரண்டாவது மாவட்டம். யாழ்மாட்டத்திற்கு பிறகு தமிழ் மக்கள் கூடுதலாக வாழ்வது மட்டக்களப்பு மாவட்டத்தில்தான்.
வட மாகணத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்குமிடையில் பால மாக அமைவது திருகோணமலை மாவட்டமாகும்.
சைவத்துக்கும் தமிழுக்குமிடையில் பிரிக்க முடியாத ஒரு தொடர்பிருக்கின்றது என்பதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
சைவம் பாதுகாக்கப்படல் வேண்டுமாக இருந்தால் தமிழ் பாதுகாக்கப்படல் வேண்டும். தமிழ் வளர்ச்சியடைய வேண்டும் என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM