ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனத்தை பெற்றுக்கொண்டு ஒரு வருடம் பூர்த்தியான தினத்தன்றே அவர்களை நிரந்தர படுத்துமாறு கோரி இன்றைய தினம்  கொழும்பில் எதிர்ப்புப் பேரணி ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 

இதன்போது நிதி மற்றும் பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும்  எதிர்ப்புப் பேரணியில் ஈடுபட்டவர்களுக்குமிடையில் கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலின் போது, தற்போது அரச நிர்வாக அமைச்சினால் நிரந்தர படுத்துவதற்கு உத்தேசித்துள்ள திகதியான 2020 ஜனவரி 01 தொடர்பில் எமது எதிர்ப்பைத் தெரிவித்தோம்.

ஒரு வருடம் பூர்த்தியாகும் தினத்தன்றே நிரந்தரமாக்குமாறு கோரினோம். பின் அரச நிர்வாக அமைச்சிற்கு எழுத்து மூலமாக தெரிவிப்பதற்கும் நியமனத் திகதியைத் திருத்தம் செய்வதற்கும் தான் நடவடிக்கை எடுப்பதாக இணக்கப்பட்டார். 

பின்னர் பிரதமரின் செயலகத்திற்கு சென்றோம். மேற்படி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சராகிய பிரதமருக்குக் கையளிக்குமாறு கடிதம் ஒன்றை கொடுத்தோம். நியமனம் வழங்கிய அதே திகதிக்கு நிரந்தரமாக்குமாறு கோரி அழுத்தம் கொடுப்போம். எனத் தெரிவித்தனர்.