வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரிடமிருந்து 6 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவுநேர கடமையின் நிமித்தம் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணையின் போது குறித்த கஞ்சாவினை சாய்ந்தமருது பகுதியிலிருந்து விற்பனைக்காக வாங்கியதாக குறித்த இளைஞன் வாக்குமூலமளித்துள்ளார். 

இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், 

குறித்த கஞ்சா விற்பனையுடன் தொடர்புப்பட்ட வியாபாரிகள் வெளியில் நடமாடலாமெனவும், அவர்களை கண்டுபிடிப்பதற்காக  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.