ஈரானின் பிரதி சுகாதார அமைச்சர் ஈராஜ் ஹரிர்ச்சி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெஹ்ரானின் ஐ.எல்.என்.ஏ செய்தி நிறுவனம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானியர்களுக்கு முகமூடிகள் மற்றும் சோதனைக் கருவிகள் இல்லாத காரணத்தினால் ஈரானில் இன்று கொரோனவினால் உயிரிழந்தவர்கள் தொகையானது 15 ஆக உயர்வடைந்துள்ளது.

ஈரானின் உத்தியோகபூர்வ தகவலின்படி இதுவரை அங்கு கொரோனாவினால் 95 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவளை முதலில் சீனாவின் வுஹானில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனாவானது உலகம் முழுவதும் 2,600 க்கும் மேற்பட்டவர்களின் உயிர்களை காவு கொண்டுள்ளது.

சீனாவில் 77,000 பேர், தென் கொரியாவில் 1,200 பேர் மற்றும் இத்தாலியில் 229 பேர் உட்பட சுமார் 80,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதே நேரத்தில், ஆஸ்திரிய மற்றும் குரோஷிய ஆகிய நாடுகளும் கொரோனா நோயல் பாதிக்கப்பட்டவர்களை தனது நாட்டில் இன்றைய தினம் அடையாளம் கண்டுள்ளது.