வெல்லவாய - தனமல்வில வீதியில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீதியில் வந்த பஸ்ஸொன்று எதிர்த்திசையில் வந்த காரொன்றுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.