கொழும்பு கோட்டை பகுதியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது மாடியிலிருந்து சிறுவன்  விழுந்து உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று பிற்பகல் 3.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 16  வயதுடைய சிறுவன்  என தெரியவந்துள்ளது.

இலங்கை மத்தி வங்கியின் கடமையாற்றும்  சிரேஷ்ட அதிகாரி ஒருவரின்  மகனே இவ்வாறு வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

உயிழந்த சிறுவனின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கொழும்பு கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.