கண்கள் இல்லாத, பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும் வினோத உயிரினம் என்று மெக்ஸிக்கோ கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

மெக்ஸிக்கோ - புவேர்ட்டோ வல்லார்டா கடற்கரையில் டொல்பின் போன்ற தலை அமைப்புடைய குறித்த உயிரினத்துக்கு கண்கள் இல்லாமல், கொடிய பற்களுடன் வினோதமான உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதைக்கண்ட மக்கள் இதுபோன்ற ஒரு உயிரினத்தை கண்டதில்லை எனவும் அத்தோடு குறித்த உயிரினம் உயிரிழந்து கிடந்தது என நினைத்துள்ளார்கள். அதன் பின்னர் வினோத உயிரினம் குறித்து கடல் மற்றும் வன உயிரின அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் அந்த உயிரினம் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய ஆராய்ச்சியாளர்கள், பசுபிக் கடலின் சூரிய ஒளி புகமுடியாத மிக ஆழமான பகுதியிலிருந்து அந்த உயிரினம் வந்திருக்கலாம் எனவும், என்னேரமும் இருள் சூழ்ந்திருக்கும் அந்த பகுதியில் இந்த உயிரினம் வாழ்வதால் அதற்கு கண் தேவை படமால் இருந்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.