காட்டு விலங்குகளை உண்பதற்கும் விற்பனைக்கும் சீனாவில் முற்றாகத் தடை

25 Feb, 2020 | 04:53 PM
image

காட்டு விலங்குகள் நுகர்வு மற்றும் வர்த்தகத்திற்கு  முழுமையாக தடைவிதிக்கப்படுவதாக சீன அரசாங்கம் திங்கட்கிழமை அறிவித்துள்ளதாக சீனாவின் அதிகாரப்பூர்வ சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

“கொவிட்19“ வைஸ் சீனாவில் சுகாதார மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதை அடுத்து கடந்த ஜனவரி மாதத்தில் வனவிலங்குகளின் வர்த்தகம் மற்றும் நுகர்வை நிறுத்தி வைக்க சீனா முடிவு செய்தது,

ஆரம்ப கொரோனா நோய்த்தொற்றுகள் ஹூபேயின் மாகாண தலைநகர் வுஹானில் உள்ள ஒரு வனவிலங்கு சந்தையில் இறைச்சிகளை கொள்வனவு செய்த நபர்களிடமிருந்து கண்டறியப்பட்டதையடுத்து குறித்த சந்தை முற்றாக மூடப்பட்டதுடன், வனவிலங்கு விற்பனையும் நாடளாவிய ரீதியில் நிறுத்திவைக்கப்பட்டது.

தற்போதைய சூழ்நிலையில் “கொவிட்19“ வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவில் கிட்டத்தட்ட 2,700 பேர் வரை  உயிரிழந்துள்னர்.  உலகில் இதாலி, ஈரான், தென்னாபிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், தொற்றுநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான முக்கியமான தருணத்தில், சீனா அரசு உள்ளதால், சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸ் தலைமையிலான அரசு வனவிலங்குகள் நுகர்வை முற்றாக தடை செய்ய தீர்மானித்துள்ளது. 

இதன் படி, வனவிலங்குகளின் சட்டவிரோத நுகர்வு மற்றும் வர்த்தகம்,  நுகர்வு நோக்கத்திற்காக காட்டு விலங்குகளை வேட்டையாடுவது, வர்த்தகம் செய்வது அல்லது கொண்டு செல்வது உள்ளிட்ட செயற்பாடுகள்  "கடுமையாக தண்டிக்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும் விஞ்ஞான ஆராய்ச்சி, மருத்துவ பயன்பாடு மற்றும் காட்சிபடுத்தல் உள்ளிட்ட நுகர்வு அல்லாத நோக்கங்களுக்காக காட்டு விலங்குகளை பயன்படுத்தும் போது, அவ் விலங்குகள்  கடுமையான பரிசோதனை, மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வுக்குட்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47