(எம்.மனோசித்ரா)

மத்திய வங்கி பிணை முறி மோசடி இடம்பெற்று எதிர்வரும் 27 ஆம் திகதியுடன்  5 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமை கவலையளிப்பதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்தார்.

அத்துடன் மார்ச்சில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள வழக்கில் பிரதான சூத்திரதாரிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஊடக அமைச்சில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.