உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியத்தின் மரணம் குறித்து விசாரணையில் வெளியாகியுள்ள தகவல் !

Published By: Digital Desk 3

25 Feb, 2020 | 02:47 PM
image

சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், முய் தாய் (Muay Thai) எனும் குத்துச்சண்டைப் போட்டியின் போது மரணமடைந்தமை இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் 32 வயதான பிரதீப் சுப்ரமணியம் கலந்துகொண்டார். இந்நிலையில், குறித்த போட்டியில் 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார்.

போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற வைத்தியப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர்.

அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, பிரதீப் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் குறித்த போட்டியின் போது பிரதீப் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார்.

விசாரணையின்போது, குத்துச்சண்டைப் போட்டியின்போது பதிவான காணொளிகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.

சிங்கப்பூரின் உடல் கட்டமைப்புச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான 32 வயதுடைய பிரதீப் இதயச் செயலிழப்பால் உயிரிழந்ததாக மரண விசாரணை அதிகாரி கமலா பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20