பிரேசிலில் பிறந்த குழந்தை ஒன்று வைத்தியர்களை கோவத்துடன் முறைத்துப் பார்த்த போது பிடிக்கப்பட்ட படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.

பிறந்துவுடன் குறித்த குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவதற்கு வைத்தியர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையிலேயே அந்தக் குழந்தை வைத்திர்களை பார்த்து முறைத்துள்ளது.

இந்த சம்பவம் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு குழந்தையின் தொப்புள் கொடியை வைத்தியர்கள் வெட்டியவுடன் குழந்தை தனது முதல் அழுகையை பதிவு செய்ததுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த படங்களை எடுத்த புகைப்படக் கலைஞர் தெரிவிக்கையில்,

குழந்தை கண்களை திறந்தும் அழவில்லை , அதற்கு மாறாக கோபத்துடன் முறைத்துப் பார்த்தது. அத்தோடு தொப்புள் கொடியை வெட்டிய பின்னரே அந்தக் குழந்தை தனது முதல் அழுகையை பதிவு செய்தது. இதை பார்த்த நாங்கள் வியப்பில் ஆழ்ந்துபோனோம் என அவர்  தெரிவித்தார்.

Image Help : Daily Mail