ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணியில் இணைந்துசெயற்படவேண்டும் - அஸாத் சாலி

Published By: Digital Desk 3

25 Feb, 2020 | 03:41 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கெளரவமான முறையில் அரசியல் செய்யவேண்டும் என்றால் சஜித் பிரேதாசவின் அழைப்புக்கு கவனம் செலுத்தி, சஜித் பிரேமதாசவின் புதிய கூட்டணியில் இணைந்துசெயற்படவேண்டும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

தேசிய ஐக்கிய முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஏனைய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது. குறித்த கூட்டணியின் தவிசாளராக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன நியமிக்கப்பட்டிருக்கின்றார். கூட்டணி அமைப்பதற்கு முன்னர் இரண்டு கட்சி உறுப்பினர்களுக்குமிடையில் கருத்து முரண்பாடுகள் இருந்ததுடன் இருதரப்பினரும் விமர்சித்துக்கொண்டும் இருந்தனர்.

ஆனால் தற்போது கூட்டணி அமைக்கப்பட்டு, பதவிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில் அவர்களுக்கிடையில் கடந்த காலங்களில் கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் அதனை மறந்து இணைந்து செயற்படுவதே நியாயமாகும். என்றாலும் கூட்டணி அமைத்த பின்னரும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களில் அதிகமானவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இழிவுபடுத்தும்வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனவே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ந்தும் பொதுஜன பெரமுன உறுப்பினர்களால் இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருக்காமல் சஜித் பிரேமதாசவின் அழைப்பை ஏற்று கெளரவமாக செயற்படவேண்டும். வேட்புமனுவில் இடம் கிடைக்காது என்ற அச்சத்திலே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக குரல்கொடுக்க  கட்சி உறுப்பினர்கள் அஞ்சுகின்றனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58