பொறுப்­புக்­கூறலை நடைமுறைப்படுத்த குற்­ற­வியல் நீதி­மன்­றமே ஒரே­வழி; கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் விசேட செவ்வி

Published By: J.G.Stephan

25 Feb, 2020 | 12:25 PM
image

தமிழ் மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­றலை இலங்கை அர­சாங்­கத்­தினை கட்­டுப்­ப­டுத்தும் அதி­கா­ர­மற்ற ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யினுள் முடக்­கு­வ­தனால் எவ்­வி­த­மான பயனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. ஆகவே சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு இந்த விட­யத்­தினை நகர்த்­துவதன் ஊடா­கவே நீதியைப் பெற முடியும் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் வீர­கே­சரிக்கு வழங்­கிய செவ்­வி­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வருமாறு:

கேள்வி:- தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்­செ­ய­லாளர் சி.வி.விக்னேஸ்வரன் உங்­க­ளு­டைய தரப்பின் மீது வைத்துள்ள பகி­ரங்க குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கான உங்களின் பதில் என்­ன­?

பதில்:-- விக்­னேஸ்­வரன் முன்­வைத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு எமது கட்­சியின் சட்ட ஆலோ­சகர் சட்­டத்­த­ரணி சுகாஸ் முழு­மை­யான பதில்­களை அளித்­துள்ளார். ஆகவே அப்­ப­தில்­க­ளுக்கு மேல­தி­க­மாக எத­னையும் கூறு­வ­தற்கில்லை.

கேள்வி:- கட்­சியின் தலைவர் என்ற வகையில் உங்­களின் பிர­தி­ப­லிப் பினையே கோரு­கின்றேன்?

பதில்:- எமது கட்சி சார்ந்து அப்­பட்­ட­மான பொய்­க­ளுடன் அவர் வெளி­யிட்ட அறிக்­கையின் மூலம் மிகக் கீழ்த்­த­ன­மான அர­சி­ய­லுக்குள் விக்­னேஸ்­வரன் கால­டி­யெ­டுத்து வைத்­து­விட்டார் என்­பதை எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு மாற்று அணி­யென்ற பெயரில் கூட்­ட­மைப்பின் பாணி­யி­லேயே செயற்­ப­டு­வதை நாம் அம்­ப­லப்­ப­டுத்­து­வதை சகிக்க முடி­யாது எம்­மீது அப்­பட்­ட­மான பழி­களை சுமத்­தி­யுள்ளார்.

தமிழ் மக்கள் தமக்­கான நியா­ய­மான அர­சியல் சக்­தி­யாக தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியை ஏற்­றுக்­கொண்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தையே விக்­னேஸ்­வரன் இலக்­காக வைத்து செயற்­ப­டு­கின்­ற­மையின் வெளிப்­பா­டா­கவே அறிக்கை உள்­ளிட்ட அவரின் செயற்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. எமது தரப்பு தொடர்பில் அப்­பட்­ட­மான பொய்­களை வெளிப்­ப­டுத்­தி­யதன் மூலம் விக்­னேஸ்­வரன் தரப்பின் அர­சியல் வங்­கு­ரோத்து நிலை­மையும் அம்­ப­ல­மா­கி­யுள்­ளது என்றே கரு­து­கின்றேன்.

கேள்வி:- ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரனை தவிர்த்து மாற்று அணி­யொன்று அமைக்­கப்­ப டுகின்­ற­போது நிபந்­த­னை­யற்ற ஆத­ர வ­ளித்து விக்­னேஸ்­வ­ரனை

தலை­வ­ராக ஏற்­கத்­த­யா­ராக உள்­ள­தாக கூறிய நீங்கள் அவ­ருடன் முரண்­பட்­டதேன்?

பதில்:-- முத­லா­வ­தாக விக்­னேஸ்­வரன் எமது தரப்­புடன் இணை­வதை இந்­தியா விரும்­ப­வில்லை என்று எம்­மி­டத்தில் கூறினார். அத்­துடன் கொள்­கைக்கு முன்­னு­ரிமை அளிக்­காது வெறு­மனே மாற்று அணி­யொன்றை உரு­வாக்க முடி­யாது என்று நாம் 2010இலி­ருந்து கூறி­வ­ரு­கின்ற நிலையில் மாற்று அணியை கொள்கை பற்­றற்ற கூட்­ட­மைப்பு போன்ற அர­சியல் கூட்­ட­ணி­யாக உரு­வாக்­கு­வ­த­னையே விக்­னேஸ்­வரன் இலக்­காக கொண்­டி­ருந்தார் முனைந்­தி­ருந்தார்.

நாம் அவ­ருடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு முனைந்­த­போதும் ஆக்­க­பூர்­வ­மான நிலை­மை­களை முற்­றாக நிரா­க­ரிக்கும் வகை­யி­லான செயற்­பா­டு­களை விக்­னேஸ்­வ­ரனே முன்­னெ­டுத்­தி­ருந்தார். கொள்கை பற்­று­று­தி­யற்ற தவ­றான பாதையில் அவ­ரு­டைய நகர்­வா­னது அவ­ருடன் இணைந்து பய­ணிக்க முடி­யாது என்ற தீர்­மா­னத்­தினை தவிர்க்க முடி­யாது எடுக்கும் சூழ­லுக்குள் நாம் தள்­ளப்­பட்டோம்.

உதா­ர­ண­மாக, ஜனா­தி­பதித் தேர்­த­லின்­போது பல்­க­லைக்­க­ழக மாண­வர்­களின் ஒருங்­கி­ணைப்பின் கீழ் ஆறு கட்­சிகள் கூட்­டி­ணைந்து நிபந்­த­னை­களை தயா­ரித்­த­போது புதிய அர­சி­ய­லமைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையை ஒற்­றாட்­சிக்கு உட்­பட்­டது என்று பகி­ரங்­க­மாக கூறிய விக்­னேஸ்­வ­ரனே சுமந்­தி­ர­னுடன் இணைந்து அதனை நிபந்­தனை பட்­டி­யலில் சேர்ப்­ப­தற்கு எதிர்ப்­பினை வெளி­யிட்­டி­ருந்­தமை அவ­ரு­டைய மாறு­பட்ட நிலை­மையை கூற­மு­டியும்.

கேள்வி:- தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி சீனத் தரப்­புடன் இர­க­சிய சந்திப்­பு­களை நடத்­தி­யி­ருந்­ததா?

பதில்:- இது­வொரு அப்­பட்­ட­மான பொய்­யாகும். விக்­னேஸ்­வரன் அர­சியல் ஆதா­யத்­துக்­கா­கவே ஆதா­ர­மற்ற வகையில் இவ்­வா­றான குற்­றச்­சாட்­டினை முன்­வைத்­துள்ளார். அதா­வது, தான் இந்­திய அர­சாங்­கத்தின் கைப்­பொம்­மை­யாக மாறிக்­கொண்டு வரு­வது அம்­ப­லப்­ப­டுத்­தப்­ப­டு­வதை மறைக்கும் வகை­யி­லேயே எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை அடுக்­கி­யுள்ளார்.

எமக்கு யாரையும் இர­க­சி­ய­மாக சந்­திக்க வேண்­டிய தேவை இல்லை. இர­க­சிய சந்­திப்­பு­களை நடத்தும் அள­வுக்கு  நாம் அர­சியல் ரீதி­யாக பல­வீ­ன­மா­ன­வர்கள் அல்லர். தமிழ்த் தேசிய முன்­ன­ணி­யி­ன­ராக நாம் சீனா சார்­பா­ன­வர்கள் என்­பதை ஆதா­ரத்­துடன் நிரூ­பிக்­கின்ற பட்­சத்தில் அர­சி­ய­லி­லி­ருந்து வில­கு­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம் என்­பதை திட்­ட­வட்­ட­மாக கூறு­கின்றோம்.

கேள்வி:- இந்­திய எதிர்ப்­பு­வாத போக்கில் பய­ணிக்­கின்­ற­மைக்கு விசேட கார­ணங்கள் ஏதும் உள்­ள­னவா?

பதில்-:- எமது தரப்பு இந்­திய எதிர்ப்­பு­வா­திகள் அல்ல. இந்­தி­யா­வி­னு­டைய நலன்­களும் எமது நலன்­களும் ஒரு­ புள்ளியில் சந்­திக்கச் செய்­வ­தற்­கான அடிப்­ப­டையில் தான் நகர்­வுகள் அமைய வேண்டும் என்றே கூறு­கின்றோம். வெறு­மனே இந்­தியா தனது நலன்­களை மட்டும் பேணி எமக்கு தீமை வரக்­கூ­டிய வகை­யி­லான நிலைப்­பா­டு­களை நாம் கொண்­டி­ருக்க முடி­யாது என்­பதில் தெளி­வாக இருக்­கின்றோம்.

உதா­ர­ண­மாக கூறு­வ­தானால், 13ஆவது திருத்­தச்­சட்டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­போது தமிழ்த் தேசிய அர­சியல் தரப்­புகள் ஏகோ­பித்து ஒற்­றை­யாட்­சிக்குள் அதனை ஏற்க முடி­யாது என்றே கூறி­யி­ருந்­தன. ஆனால் தற்­போது இந்­தி­யாவின் நல­னுக்­காக முழு­மை­யில்­லாத 13ஆவது திருத்தச் சட்­டத்­தினை தீர்­வாக ஏற்­றுக்­கொள்­ளு­மாறு வலி­யுத்­தப்­ப­டு­கின்­ற­போது எமது மக்­களின் நலன்­களை கைவிட்டு இந்­தி­யாவைப் பகைத்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக சாத­க­மான முடிவை எடுப்­ப­தற்கு நாம் தயா­ரில்லை.

இந்­தியா கூறு­கின்ற அனைத்­தையும் கண்ணை முடிக்­கொண்டு ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று நாம் கூறு­வ­தற்­காக நாம் இந்­திய எதிர்ப்­பு­வா­திகள் என்று சொல்­லப்­ப­டு­வது போலிக்­குற்­றச்­சாட்­டாகும். இந்­தி­யாவின் நலன்­க­ளுக்குள் எமது நலன்­க­ளையும் உள்­ளீர்த்து அதில் வெற்­றி­பெறும் நிலை­மையை ஏற்­ப­டுத்த வேண்டும் என்­பதே எமது முயற்­சி­யாக இருக்கின்றது.

கேள்வி:- தமிழ்த் தேசிய பரப்பில் கூட்ட­மைப்­புக்கு எதி­ரான அர­சியலை முன்­னெ­டுத்து வந்த நீங்கள் தற்­போது விக்­னேஸ்வரன் தலைமையிலான அணி­யுடன் முரண்பட்­டுக் ­கொண்டதையடுத்து, கள அர­சியலில் சவா­லான நிலைமைகள் அதிகரித்துள்ளன என்று கருதுகின்றீர்களா?

பதில்:-- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை நாம் கடந்த பத்து வரு­டங்­க­ளாக அம்­ப­லப்­ப­டுத்தி வரு­கின்றோம். நாங்கள் ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் கூறிய விட­யங்­களை தற்­போது தமிழ் மக்கள் சரி­யென ஏற்­றுக்­கொள்­கின்ற சூழல் உரு­வா­கி­யுள்­ளது. அவ்­வா­றான நிலையில் கூட்­ட­மைப்­புக்கு மாற்­றான கொள்­கையில் உறு­திப்­பா­டான தரப்­பாக தமிழ் மக்கள் எம்மை அடை­யாளம் காண விளை­கின்­றமை கடந்த தேர்­தல்­களில் வெளிப்­பட்டு வரு­கின்­றது.

ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி மாற்று அணி­யாக வந்­து ­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக தொடர்ச்­சி­யாக திட்­ட­மி­டப்­பட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. 2010ஆம் ஆண்டில் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து ஸ்ரீகாந்தா, சிவா­ஜி­லிங்கம் வெளி­யே­றி­வந்து மாற்று அணி­யென்று போட்­டி­யிட்­டார்கள். 2015இல் ஜன­நா­யகப் போரா­ளிகள் என்­றொரு கட்சி உரு­வாகி கள­மி­றக்­கப்­பட்­டது. 2018இல் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் வெளி­யேறி தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணி­யுடன் இணைந்து மாற்று அணி­யென்று போட்­டி­யிட்டார்.

இந்த முயற்­சிகள் அனைத்தும் தோல்வி கண்டு நாம் தீவி­ர­மாக வளர்ந்து கொண்டு வரு­கின்ற நிலையில், தற்­போது விக்­னேஸ்­வ­ரனை முன்­னி­லைப்­ப­டுத்தி மாற்று அணி­யென்ற போர்­வையில், எமக்கு எதி­ரான செயற்­பாடு முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. அந்த முயற்­சியும் தோல்­வி­ய­டையும் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. தமிழ் மக்­க­ளுக்­கான உண்­மை­யான தலை­மைத்­து­வத்­தினை வழங்கக் கூடிய தரப்­பாக தமிழ்த் தேசிய முன்­ன­ணியே இருக்­கின்­றது என்ற புரி­தலை தமிழ் மக்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்­பதில் எந்­த­வி­த­மான மாற்­றுக்­க­ருத்­துக்கும் இட­மில்லை. அடுத்த தேர்தல் அதனை நிரூ­பிக்கும்.

கேள்வி:- ஜெனீவா தீர்மானத்திலி ருந்து இலங்கை அர­சாங்கம் வெளியே­றப்­போ­வ­தாக

அறிவித்துள்ள­மையை தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி எவ்­வாறு பார்க்கின்றது?

பதில்:-- ஜெனீவா தீர்­மா­னங்­களை நிரா­க­ரித்து அதி­லி­ருந்து வெளி­யே­று­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் எடுத்­துள்­ளது. இந்த நிலையில், ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இலங்கை அர­சாங்­கத்தின் முடி­வு­களைத் தாண்டி  தமிழ் மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூறும் செயற்­பாட்­டினை நகர்த்த முடி­யாது முடக்­கப்­பட்­டுள்ள நிலை­மையே ஏற்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான தரு­ணத்தில் அதி­கா­ர­மில்­லாத ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் தமிழ் மக்­களின் பொறுப்­புக்­கூறும் விட­யத்­தினை தொடர்ந்தும் தக்­க­வைத்­தி­ருப்­பதால் எவ்­வி­த­மான பயனும் கிடைக்­கப்­போ­வ­தில்லை. வெறு­மனே அர­சாங்­கத்­துக்கு அழுத்­தங்­களை மட்­டுமே வழங்க முடி­யுமே தவிர பொறுப்­புக்­கூ­றலை நடை­முறை சாத்­தி­ய­மாக்க முடி­யாது.

ஆகவே தான் இழைக்­கப்­பட்ட அநீ­தி­க­ளுக்­கான நீதியைப் பெற்­றுக்­கொள்ளும் செயற்­பாட்டில்  தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியும் அத­னுடன் இணைந்து பணி­யாற்றும் அமைப்­பு­களும் இலங்கை அர­சாங்­கத்­தினை சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­துக்கு கொண்டு செல்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் உள்ளோம்.

சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்தின் ஊடாக இலங்கை விசா­ரணை செய்­யப்­பட வேண்டும் என்­பதிலும் எவ்­வி­த­மான விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளையும் செய்­யக்­கூ­டாது என்­ப­திலும் உறு­தி­யாக இருக்­கின்­ற­தோடு இதனை வல்­ல­ரசு நாடு­க­ளுக்கு ஏகோ­பித்த அழுத்­த­மாக வலி­யு­றுத்த வேண்டும் என்­ப­திலும் உறு­தி­யாக இருக்­கின்றோம்.

கேள்வி:- சர்­வ­தேச குற்றவியல் நீதிமன்­றத்­திலோ அல்­லது விசேட தீர்ப்பா­யத்தின் முன்னால் இலங்கையை நிறுத்­து­வ­தென்­பதோ சாத்­தி­ய­மான விட­யமா?

பதில்:-- முத­லா­வ­தாக பாது­காப்பு சபையில் தீர்­மா­ன­மொன்றை நிறை­வேற்றி சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்­றத்­தினை நோக்கி இலங்­கையை நகர்த்­தலாம். அதற்கு வல்­ல­ரசு நாடு­களின் அங்­கீ­கா­ரத்­தினை பெற்­றுக்­கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது.

அவ்­வா­றில்­லாது விட்டால், பாதிக்­கப்­பட்ட மக்கள் தமிழர் தாய­கத்தில் இன­அ­ழிப்பு நடந்­தது என்­பதை அதி­தீ­வி­ர­மாக வலி­யு­றுத்­து­வ­தோடு அதற்­கான நீதியைப் பெறு­வ­தற்கு சர்­வ­தேச குற்­ற­வியல் நீதி­மன்ற விசா­ர­ணையே அவ­சியம் என்­பதில் எவ்­வி­த­மான விட்­டுக்­கொ­டுப்­பற்ற இறுக்­க­மான கருத்­து­ரு­வாக்­கத்­தினை சர்­வ­தே­சத்தில் உரு­வாக்க வேண்டும்.

உதா­ர­ண­மாக கூறு­வ­தானால், மியன்­மாரின் ரோஹிங்­கியா விட­யத்­தினை எடுத்­துக்­கொண்டால் அந்­நாடு ரோம் உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­தி­டாது இருந்­தாலும் கூட அங்கு நடந்த சம்­ப­வங்­க­ளுக்­கான சான்­று­களின் பிர­காரம் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றை முன்­னெ­டுப்­ப­தற்கு மாற்­று­வ­ழி­யொன்று அடை­யாளம் காணப்­பட்டு விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஆகவே, இதனை முன்­னு­தா­ர­ண­மாகக் கொண்டு நாமும் எவ்­வி­த­மான விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளு­மின்றி ஏகோ­பித்து செயற்­பட வேண்டும். அவ்­வா­றில்­லாது தமிழ் மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­ட­வர்­களே, இங்கு இனப் ­ப­டு­கொலை நடந்­தது என்­ப­தற்கு சான்­றுகள் இல்லை, சர்­வ­தேச விசா­ரணை நிறை­வ­டைந்து விட்­டது என்று கூறி கடந்த காலத்தில் மூன்று தட­வைகள் கால­அ­வ­கா­சத்­தினை பெற்­றுக் ­கொ­டுத்து தாம் சார்ந்த ஐக்­கிய தேசியக் கட்­சிக்­காக செயற்­ப­டு­ப­வர்கள் இருக்கும் வரையில் குற்­ற­வியல் நீதி­மன்றம் நோக்­கிய நகர்வு பின்­ன­டை­வு­க­ளையே சந்­தித்­துக்­கொண்­டி­ருக்கும். ஆகவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பே தமிழ் மக்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­ற­லுக்கு முழு­மை­யான தடை­யாக இருக்­கின்­றது.

கேள்வி:- இலங்கை அர­சாங்கம் அறிவித்­துள்­ளதன் பிர­காரம் ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து இல­குவாக வில­கிக் ­கொள்­வ­தற்­கான சாத்தியங்கள் உள்­ள­னவா?

பதில்:- ஆம், ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் இருக்கும் மிகப்­பெரும் பல­வீ­ன­மாக காணப்­ப­டு­வது இறை­மை­யுள்ள எந்­த­வொரு நாட்­டி­னதும் விருப்­பத்­தினை மீறி அப்பேரவையினால் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது என்பதேயாகும். ஆகவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் தாம் விரும்பிய எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு எந்த தடைகளும் இல்லை.

கேள்வி:- இலங்கை அரசாங்கம் அறிவித்ததன் பிரகாரம் ஜெனீவா தீர்மானத்திலிருந்து வெளியேற முடியும் என்று நீங்கள் கூறுகின்றபோதும், மக்களின் ஆணைபெற்ற தரப்பான கூட்டமைப்பின் சார்பில் இந்த விடயங்களை தொடர்ச்சியாக கையாண்டு வரும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவ்வாறு எழுந்தமானமாக அரசாங்கத்தினால் வெளியேற முடியாது என்றும் அழுத்தங்களை வழங்குவதற்கான மாற்றுவழிகளை தாம் கொண்டிருப்பதாகவும் கூறுகின்றாரே?

பதில்:- -வல்­ல­ரசு நாடு­களோ அல்­லது சர்­வ­தேச சமூ­கத்­தி­னரோ ஜெனீவா தீர்­மா­னத்­தி­லி­ருந்து இலங்கை வெளி­யேற முடி­யாது என்று கூற­வில்லை. சுமந்­திரன் மட்­டுமே அவ்­வாறு கூறிக்­கொண்­டி­ருக்­கின்றார். ஜெனீவா விட­யத்தில் கடந்த பத்து ஆண்­டு­க­ளாக சுமந்­திரன் கூறிய எந்­த­வொரு விட­யமும் சரியாக நடைபெற்றிருக்கின்றதா?

மேலும் அமெ­ரிக்கா, இந்­தியா போன்ற நாடுகள் ஜனா­தி­பதி கோத்­தா­பய தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக சில நட­வ­டிக்­கை­களை மேற்கொள்கின்றன. அதிலொன்றாகவே இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கான தடையை அமெரிக்கா விதித்துள்ளது. இவ்வாறான தடைகள் உள்நாட்டில் செல்வாக்கு செலுத்துமே தவிர ஐ.நா. அரங்கில் எவ்விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

ஆகவே, அத்­த­டை­க­ளுக்கு கார­ண­மாக இருந்தோம் என்று கூறிக்­கொண்டு   இருப்­ப­தெல்லாம் வெறு­மனே தமிழ் மக்­களை ஏமாற்றும் செயற்­பா­டு­க­ளாகும். இது தொடர்பிலான தெளி­வினை தமிழ் மக்கள் கொள்ள வேண்டும் என்­பதே எமது கோரிக்கையாக இருக்கின்றது.

-நேர்காணல் - ஆர்.ராம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22