அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கல்வி நெறியைத் தொடர்வதற்கும், வட்டி அற்ற கடனைப் பெற்றுக் கொள்வதற்குமான விண்ணப்பங்கள் தற்பொழுது ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 

Image result for பட்டப்படிப்பை

2016, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி, அரசாங்கப் பல்கலைக்கழகங்களில் அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான தகுதியைப் பெறாத மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

உயர்தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது 3 பாடங்களில் சித்தி பெற்ற மாணவர்கள், உயர் கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக மார்ச் 23 ஆம் திகதி வரையில் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

8 இலட்சம் ரூபா  வரையில் இதற்கான கடனைப் பெற்றுக் கொள்ள முடியும். 3 தொடக்கம் 4 வருடங்களில் இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும். இது தொடர்பிலான  மேலதிக விபரங்களை, "சுபஹ மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வேலைத்திட்டம் - 2019 - 2021", http://www.moe.gov.lk/tamil/index.php option=com_content&view=category&id=435&Itemid=1167  என்ற இணையத்தளத்தின் ஊடாக  அறிந்து கொள்ள முடியும்.