சிரியாவில் இடம்பெற்ற வான்வவழித் தாக்குதலில் பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய ஆதரவுடன் செயற்படும் சிரியாவின் அரசு படைகள் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட வான் வழித்தாக்குதல்களிலேயே இவ்வாறு பொதுமக்கள் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரியாவின் வடமேற்கு பகுதியில் ஜிகாத் அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தும் இட்லிப்பின் தெற்கே உள்ள ஜபால் அல் - சவியாவின் பகுதியில் பயங்ரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெற்றதாக மனித உரிமைகளுக்கான சிரியாவின் கண்காணிப்பகம் தெரிவித்தது.

மேலும் கண்காணிப்பகம் தெரிவிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் இட்லிப்பின் தெற்கு பகுதியில் இராணுவ படைகள் அப்பகுதியை சுற்றி வளைத்தது.

அத்தோடு கடலோர பகுதிகளான லடாகியாவை அந்நாட்டு அராங்கத்தின் இராண்டாவது நகரமான அலெப்போவுடன் இணைக்கும் M - 4 நெடுஞ்சாலையின் தெற்கே உள்ள கிராமங்களை படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்தது.

அதேவேளை இட்லிப்பின் தெற்கு பகுதியில் சிரிய இராணுவத்தினரின் முன்னேற்ற இலக்காக உள்ளதாக தெரிவித்த கண்காணிப்புத் தலைவர் ராமி அப்தெல் ரஹ்மான், ஜிஹாதிகள் மற்றும் அதனுடன் இணைந்து செயற்படும் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் M4 பகுதிகளை மீண்டும் கைப்பற்றுவதே எமது ஆட்சியின் இறுதி நோக்கம் என தெரிவித்தார்.

இந்நிலையில் தொடர்ந்து சில பகுதிகளை அரசு வசம் கொண்டு வருவதற்கு தொடர்நது இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் அவர் கருத்து வெளிட்டுள்ளார்.

அத்தோடு சிரியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வரும் தாக்குதல்களில் 380,000 க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் , பல மில்லியன் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.