எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான 'சமகி ஜனபல வேகய' எனப்படும்  கூட்டணிக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக ஜாதிக ஹெல உறுமய அறிவித்துள்ளது.

குறித்த தீர்மானம்  இன்று எடுக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் வாரத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் பொதுத்தேர்தல்  நடத்தப்படவுள்ள நிலையில்  ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான 'சமகி ஜனபல வேகய' எனப்படும்  கூட்டணிக்கு ஆதரவு வழங்க ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.