அமெரிக்காவைச் சேர்ந்த 62 வயதான ஜோர்ஜ் ஹூட்  என்பவர் 8 மணித்தியாலங்கள் பிளேன்ங் நிலையில் (plank position) நின்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார்.

62 வயதான ஜோர்ஜ் ஹூட் விசித்திரமான சாதனை ஒன்றைப் படைக்க முற்பட்டுள்துடன் அவர் பிளேன்ங் நிலையில் நின்றபடி குறித்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

பிளேன்ங் நிலை என்பது நுனி காலையும் முழங்கையையும் தரையில் ஊன்றியவாறு தரையிலிருந்து உயர்ந்து தரைக்கு சமாந்தரமாக நிற்பதாகும்.

இந்த நிலையயில் 8 மணித்தியாலம், 15 நிமிடங்கள், 15 நொடிகள் நின்றவாறு ஜோர்ஜ் ஹூட் குறித்த சாதனையைப் படைத்த ஆண் சாதனையாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவரது சாதனைக்கு முன் கனடாவைச் சேர்ந்த டானா க்ளோவாக்கா என்ற பெண் இந்த சாதனையை நிகழ்த்தியருந்தார்.

அவர் கடந்த ஆண்டு 4 மணி, 19 நிமிடங்கள் மற்றும் 55 வினாடிகள் பிளேன்ங் நிலையில் நின்றமை கின்னஸ் உலக சாதனையாக கருதப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க மெரைன் படைப்பிரிவு மற்றும் ஓய்வுபெற்ற போதைப்பொருள் அமுலாக்க நிர்வாக மேற்பார்வை சிறப்பு முகவரான ஹூட் கடந்த 2011 ஆம் ஆண்டில் ஒரு மணி நேரம் 20 நிமிடங்கள் பிளேன்ங் நிலையில் நின்று சாதனைப்படைத்திருந்தார்.

இதையடுத்து தற்போது 62 வயதான ஜோர்ஜ் ஹூட் இவர்கள் அனைவரது சாதனைகளையும் முறியடித்து கின்னஸ் சாதனைப் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(படங்கள் - சி.என்.என்)