நாளை உரையாற்றுகிறார் அமைச்சர் தினேஷ்

25 Feb, 2020 | 11:38 AM
image

(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின்  43 ஆவது கூட்டத் தொடர்  நேற்று ஆரம்பமான நிலையில்  நாளை  26ஆம் திகதி  ஜெனிவா நேரப்படி காலை 10 மணிக்கு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின் சார்பில் உரையாற்றவிருக்கின்றார்.  

இன்றைய தினம்  ஜெனிவா  வந்தடையும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாளை பேரவையில்  உரையாற்றவிருக்கின்றார். இதன்போது  இலங்கையானது    2015ஆம் ஆண்டு ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற  பிரேரணைக்கான அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக உத்தியோகப்பூர்வமாக  அறிவிக்கவிருக்கிறார்.   ஒரு நீண்ட உரையை நாளைய தினம் அமைச்சர்  தினேஷ் குணவர்த்தன நிகழ்த்தவுள்ளதாக  ஜெனிவா வளாகத்தில் அறிய முடிந்தது.

நேற்றைய  ஆரம்ப  அமர்வில்  இலங்கையின் சார்பில் வெளிவிவகார செயலர்  ரவிநாத ஆரியசிங்க தலைமையிலான குழுவினர்  கலந்துகொண்டிருந்தனர்.  நேற்றைய தினம்  ஐ.நா.  செயலாளர் நாயகம்   அன்ரோனியோ  குட்ரஸ் மற்றும்  ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லட்   ஆகியோர்  ஆரம்ப அமர்வில்  உரையாற்றினர்.  இந்நிலையிலேயே  நாளை  வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இலங்கையின்  சார்பில் உரையாற்றவிருக்கிறார். 

முக்கியமாக தனது உரையின்போது அமைச்சர் தினேஷ் குணவர்த்தன புதிய அரசாங்கம் ஏன்  ஜெனிவா பிரேரணையின் இணை அனுசரணையிலிருந்து விலகுகிறது என்பதற்கான காரணத்தை விளக்கவிருக்கிறார்.   குறித்த பிரேரணைக்கு  அனுசரணை வழங்கியமையானது   அரசியலமைப்பிற்கும் ஜனநாயகத்திற்கும்  விரோதமானது என்பதால் இவ்வாறு  தாம் அனுசரணையிலிருந்து விலகிக்கொள்வதாக   அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நாளைய தினம் ஜெனிவா  பேரவையில் விளக்கமளிக்கவுள்ளதாக   ஜெனிவா தகவல்கள் தெரிவித்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38