நாளை மறு­தினம் இலங்­கைக்கு பதி­ல­ளிக்­க­வுள்ள உறுப்பு நாடுகள்

25 Feb, 2020 | 11:25 AM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ். ஸ்ரீகஜன்)

ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையில்  நாளை மறு­தினம் வியா­ழக்­கி­ழமை  நடை­பெ­ற­வுள்ள  இலங்கை தொடர்­பான விவா­தத்­தின்­போது   மனித உரி­மை­கள் பே­ர­வையின் உறுப்­பு ­நா­டுகள் இலங்­கைக்கு பதி­ல­ளிப்­ப­தற்குத் தயா­ரா­கி ­வ­ரு­கின்­றன. 

நாளைய தினம் இலங்­கை­யா­னது   ஜெனிவா  பிரே­ர­ணையின் அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக  உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்­க­வுள்ள நிலையில் மனித  உரிமை பேர­வையின்  உறுப்­பு­நா­டு­களின் பிர­தி­நி­திகள் நாளை மறு­தினம் நடை­பெ­ற­வுள்ள விவா­தத்­தின்­போது புதிய அர­சாங்­கத்தின்  நிலைப்­பா­டுகள் தொடர்பில் பதி­ல­ளிக்­க­வுள்­ளனர். அதே­போன்று  மனித உரிமை கண்­கா­ணிப்­பகம்,  சர்­வ­தேச மன்­னிப்­புச்­சபை உள்­ளிட்ட  சர்­வ­தேச மனித உரிமை  அமைப்­புக்­களின் பிர­தி­நி­தி­களும் இலங்­கையின்  புதிய நிலைப்­பாடு தொடர்பில்   பதி­ல­ளிக்­க­வி­ருக்­கின்­றனர்.

நாளைய தினம்  பேர­வையில் உரை­யாற்­ற­வுள்ள   வெளி­வி­வ­கார அமைச்சர் தினேஷ் குண­வர்த்­தன 2015ஆம் ஆண்டு அப்­போ­தைய  இலங்கை அர­சாங்­கத்தின்  அனு­ச­ர­ணை­யுடன் நிறை­வேற்­றப்­பட்ட  30/1  என்ற பிரே­ர­ணையின்   அனு­ச­ர­ணையை வில­கிக்­கொள்­வ­தாக உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­விக்­க­வி­ருக்­கிறார்.

இந்த நிலை­யி­லேயே   அர­சாங்­கத்தின் அறி­விப்பு தொடர்­பி­லேயே  மனித உரிமை பேர­வையின் உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­திகள்   தமது நிலைப்­பாட்டை  அறி­விக்­க­வி­ருக்­கின்­றனர்.  ஜெனிவா கூட்டத் தொடர் தொடங்­கு­வ­தற்கு முன்­ப­தாக   இங்கு வந்­தி­ருந்த  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன்  உறுப்பு நாடு­களின் பிர­தி­நி­தி­க­ளுடன்   பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.  அதன்­போது  அர­சாங்கம்  பிரே­ரணை அனு­ச­ர­ணை­யி­லி­ருந்து  வில­கினால்   அடுத்த கட்டமாக  என்ன நகர்வுகளை முன்னெடுப்பது என்பது தொடர்பில் உரையாடியிருந்தார்.

அந்த அடிப்படையிலேயே   நாளை மறுதினம் நடைபெறவுள்ள விவாதத்தில்   மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் இலங்கை தொடர்பாக  உரையாற்றவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38