(க.கிஷாந்தன்)

தபால் திணைக்கள ஊழியர்கள் அட்டன் நகரில் அமைந்துள்ள தபால் திணைக்களத்திற்கு முன்பாக இன்று  பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடளாவிய ரீதியில் தபால் திணைக்கள ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஷகரிப்புக்கு ஆதரவு வழங்கும் வகையிலே அட்டன் தபால் நிலைய ஊழியர்களால் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நிலுவையிலுள்ள மேலதிக கொடுப்பனவை விரைவில் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.