இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­காத ஐ.நா.செயலர், மனித உரிமைகள் ஆணையர்

25 Feb, 2020 | 11:10 AM
image

(ஜெனி­வா­வி­லி­ருந்து எஸ்.ஸ்ரீகஜன்)

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 43ஆவது கூட்­டத்­தொடர் நேற்­றைய தினம் ஜெனி வாவில் ஆரம்­ப­மா­கிய நிலையில், முத­லா­வது அமர்வில் உரை­யாற்­றிய ஐ.நா. செய­லாளர் அன்­டோ­னியோ குடரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணை­யாளர் மிச்செல் பச்லெட் ஆகியோர் இலங்கை தொடர்­பாக எதுவும் பிரஸ்­தா­பிக்­க­வில்லை.

உல­க­ளா­விய ரீதி­யி­லான மனித உரிமைகள் விவ­கா ரம் மற்றும் கால­நிலைமாற்ற சவால் உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து  அன்­டோ­னியோ குட்­றஸ்ஸும் மிச்செல் பச்­லெட்டும் தமது உரை­களில் கூடிய கவனம் செலுத்­தி­யி­ருந்­த­னரே தவிர தனிப்­பட்ட நாடுகள் தொடர்பில் அதி­க­ளவு விட­யங்­களை முன்­வைக்­க­வில்லை.

நேற்­றைய ஆரம்ப அமர்வில் இரண்­டா­வ­தாக உரை­யாற்­றிய ஐ.நா. செயலர் அன்­டோ­னியோ குட்றஸ், மனித கடத்­தல்கள் அனைத்துப் பிராந்­தி­யங்­க­ளிலும் இடம்­பெ­று­வ­தா­கவும், பொது­மக்கள் சர்­வ­தேச சட்ட மீறல்­க­ளுக்கு உட்­ப­டு­வ­தா­கவும் சுட்டிக் காட்­டினார். ஐ.நா. செயலர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது தொழிலை முன்­னெ­டுப்­பதன் கார­ண­மாக கொல்­லப்­ப­டு­கின்­றனர். சித்­தி­ர­வ­தைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றனர். அது­மட்­டு­மன்றி உல­க­ளா­விய ரீதியில் பட்­டினி நிலைமை அதி­க­ரிப்­ப­துடன் இஞைர் வேலை­யின்­மையும் உயர்ந்து செல்­கின்­றது. அத்­துடன் குடி­யியல் மாற்­றங்கள், கால­நிலை நெருக்­கடி என்­பன புதிய சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளன. இவை அனைத்­திற்கும் ஒரே பதிலே உள்­ளது. அது மனித உரி­மை­யாகும்.

மனித உரிமை என்­பது அனைத்து பிர­ஜை­க­ளி­னதும் பிறப்­பு­ரி­மை­யாகும். அவர்கள் அபி­வி­ருத்­தியில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும் என்று குறிப்­பிட்டார்.

இதே­வேளை மூன்­றா­வ­தாக உரை­யாற்­றிய ஐ.நா. மனித உரிமை ஆணைா­யளர் மிட்செல் பச்லெட் உரை­யாற்­று­கையில், வரு­மை­யையும் சமத்­து­வ­மின்­மை­யையும் குறைப்­ப­தற்கு சமூக ஸ்திரத்­தன்மை ஊக்­கு­விக்­கப்­ப­ட­வேண்டும்.

மக்­களை பின்­ன­டை­வுக்கு இட்டுச் செல்­கின்­றன அநீ­தியை ஒழிக்கவேண்டும். எனது அலுவலகம் நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயராக இருக்கின்றது. அரசாங்கங்களுக்கான எமது தொழில்நுட்ப உதவிகளை விரிவுபடுத்துகின்றோம் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47