ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை ஜெனீவாவுக்குப் பயணமாகியுள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் ஆகியோர் தலைமையில் சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று ஆரம்பமானது.

மனித உரிமைகள் பேரவையில் நாளைய தினம் இலங்கை தொடர்பாகக் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க ஆகியோர் இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.