தெற்கு அதிவேக வீதியின் ஹம்பாந்தோட்டை முதல் கொழும்பு வரையான போக்குவரத்து சேவைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத் சபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  ஹம்பாந்தோட்டைக்கு உட்பட்ட 4 பஸ்களும் , தங்காலை பகுதிக்கு உட்பட்ட 4 பஸ்களும்  இன்று முதல் சேவையில் ஈடுபடத்தப்படவுள்ளது.

 நான்கு பஸ்கள் கொழும்பு -  ஹம்பாந்தோட்டை மற்றும் தங்காலை வரையான சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளது.

 மேலும் நான்கு பஸ்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் தங்காலையிலிருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடவுள்ளது.

இதற்கமை அப்பகுதியூடான பஸ் கட்டணங்களாக,

ஹம்பாந்தோட்டையில் இருந்து கோட்டை வரை 880 ரூபா

தங்காலையில் இருந்து கோட்டை வரை 680 ரூபா

ஹம்பாந்தோட்டையில் இருந்து மாக்கும்புர வரை 810 ரூபா

தங்காலையில் இருந்து மாக்கும்புர 610 ரூபா அறவிடப்படவுள்ளது.

அத்தோடு 8  பஸ் சேவைகள் அடங்கலாக 14 பஸ் சேவைகள் குறித்த வீதியூடாக பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.