நாடளாவிய ரீதியிலுள்ள ஊடகவியலாளர்களுக்கு சலுகைகளை வழங்கும் நோக்குடன் சகல ஊடகவியலாளர்களிதும் தகவல்களை தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

2019 ஆம் 2020ஆம் ஆண்டுகளில் அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கிய அடையாள அட்டையை வைத்திருப்போர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.

தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் www.media.gov.lk என்ற இணையதளத்தில் இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.

அத்தோடு இதற்கான விண்ணப்படிவத்தையும் தரவிறக்கம்செய்து கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை இலக்கம் 163,கிருலப்பனை மாவத்தை, பொல்கையன்கொட கொழும்பு ஐந்தில் அமைந்துள்ள ஊடக அமைச்சுக்குஅனுப்பி வைக்க முடியும்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)