(க.கிஷாந்தன்)

 

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை மவுஸ்ஸாஎல்ல தோட்டத்தில் இன்று காலை தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 6 பேர்  குளவிக்கொட்டுக்கு இலக்காகி லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவிகளே இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அனுமதிக்கப்பட்ட இவர்களில் 4 பேர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பியதோடு மேலும் 2 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.