ஹொரண, இலிம்ப பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் முச்சக்கரவண்டி சாரதியான 32 வயதுடைய நபரே கொல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரியே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஹொரண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.