ஜேர்மனியில் பெருமளவானவர்கள் கலந்துகொண்ட  ஊர்வலமொன்றிற்குள் நபர் ஒருவர் வாகனத்தை செலுத்தியதில் பலர் காயமடைந்துள்ளனர்.

வோல்க்மார்சென் என்ற நகரில் இந்த சம்;பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ள காவல்துறையினர் இது திட்டமிட்ட சம்பவமா என்பதை உடனடியாக சொல்லமுடியாத நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

பலர் காயமடைந்துள்ளனர் சிலர் படுகாயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்கள் குழந்தைகளும் காயமடைந்துள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ரோஸ் திங்கட்கிழமை என்ற நிகழ்வை கொண்டாடிக்கொண்டிருந்தவர்கள் மத்தியிலேயே நபர் ஒருவர் தனது வாகனத்தை செலுத்தியுள்ளார். குறிப்பிட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த மாநிலத்தில் இடம்பெறவிருந்த அனைத்து ரோஸ்திங்கட்கிழமை ஊர்வலங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வீதிதடையை தாண்டி குறிப்பிட்ட நபர் தனது வாகனத்தை செலுத்தினார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் இடம்பெற்ற இனவெறி தாக்குதலில் பலர் கொல்லப்பட்ட அதிர்ச்சியிலிருந்து ஜேர்மனி இன்னமும் மீளாத நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.