எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் மாபெரும் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பினை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் விடுத்துள்ளனர் .

இன்றையதினம் (24) முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் வருடாந்த பொதுகூட்டம் வட்டுவாகல் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த ஒன்றுகூடலிலே இந்த போராட்டத்துக்கான அழைப்பு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம .ஈஸ்வரியால் விடுக்கப்பட்டுள்ளது .
இதன்போது கருத்து தெரிவித்த முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி ம .ஈஸ்வரி,
இன்று ஐ.நா மனித உரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்றையதினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றுகூடி எதிர்வரும் மார்ச் 8 ஆம் திகதி முல்லைத்தீவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் மாபெரும் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பினை விடுகின்றோம் .
இந்த போராட்டம் ஐ.நா மனிதஉரிமைகள் சபையின் 43 ஆவது கூட்டத்தொடர் நடைபெறுகின்ற காலப்பகுதியில் இடம்பெற இருக்கின்றது எனவே பாரிய போராட்டமாக இந்த போராட்டம் இடம்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றோம்
கடந்த மூன்று வருடங்களாக நாம் வீதியில் நின்று எமக்கான நீதியை கோரி போராடி வரும் நிலையில் எமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை நான்காவது ஆண்டில் எமது போராட்டம் தடம் பதிக்கின்றது .
அன்றையதினம் அனைவரும் அரசியல் கட்சி பேதங்களின்றி கலந்துகொண்டு எமது போராட்டத்துக்கு பலம் சேர்க்குமாறு வேண்டுகின்றோம் . மார்ச் 8 ஆம் திகதி அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி எமது போராட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக சங்கங்களை கேட்டு நிற்கின்றோம் .
ஐ.நாமனித உரிமை கூட்டத்தொடரில் ஏற்கனவே எங்கள் அரசியல் பிரதிநிதிகள் சென்று இரண்டு தடவைகள் இலங்கை அரசுக்கு பொறுப்புக்கூறுவதற்கான கால நீடிப்பு கொடுக்கப்பட்டும் கூட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளான எங்களுக்கான தீர்வுகள் எவையும் கிடைக்காத நிலையில் நாங்கள் தொடர்ந்தும் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது .
புதிய ஐனாதிபதி அதிகாரத்தில் இருந்த போதுதான் 2009 ஆம் ஆண்டு போர் நிறைவுபெற்ற காலத்தில் எமது உறவுகளை படையினரிடம் ஒப்படைத்தோம் புதிய அரசாங்கம் ஐ.நா கொடுத்த தீர்மானத்திலிருந்து விலகி கொள்கின்றோம் என்று அறிவித்துள்ளமைக்கு இணங்க நாங்கள் சொல்கின்றோம் அரசு விலகினால் என்ன விலகாட்டில் என்ன கால நீடிப்பு கொடுத்தவர்களுக்கும் சேர்த்து தான் சொல்கின்றோம்.
இந்த அரசால் எங்களுக்கு எந்த தீர்வும் வராது காலநீடிப்பு கொடுத்தும் அரசாங்கம் அதிலிருந்து விலகிக்கொள்கின்றது என்றால் குற்றம் புரிந்தபடியால்தான் விலகிக்கொள்கின்றார்கள்.
எனவே ஐ.நா கூட்டத்தொடரில் எங்களுக்கான உண்மையான தீர்வினை பெற்றுத்தரவேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. இதனை அனைவரும் உணர்து கொண்டு செயற்படவேண்டும் என்றும் சர்வதேசம் இனியும் எமக்கான நீதியை பெற்றுத்தர பின்நிற்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார் .



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM